மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுலபமாக உடல் எடையை குறைக்க பெண்களே தயாரா!.. உங்களுக்காக இதோ அருமையான டிப்ஸ்.!
இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க பலவகையிலும் பணம் செலவழித்து வருகின்றனர். குறைந்த செலவில் உடல் எடையை குறைப்பதற்கான சில வழிகளைப் பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.
பெரும்பாலான பெண்களில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது உடல் எடை அதிகரிப்பு. இதனால் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்தல், உணவு பழக்கங்களை மாற்றுவது மற்றும் குறைந்த அளவிலான உணவுகளை சாப்பிடுவது போன்ற பல வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைப்பதற்காக இயற்கையான முறையில், வீட்டிலேயே எடையை குறைப்பதற்கான சில வழிகள் உள்ளன.அவைகளைப்பற்றி காண்போம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலோரி குறைவான உணவுகள் :
கொய்யா பழம், மாதுளை, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட கலோரி குறைவாக உள்ள பழவகைகளில் புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளதால் அவை உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்கும்.
சத்தான உணவு பழக்கம் :
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் வறுத்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அத்துடன் காலையில் காபிக்கு பதிலாக புத்துணர்ச்சியூட்டும் மூலிகை தேநீர் குடிக்கலாம். உதாரணத்திற்கு கிரீன் டீ, இஞ்சி டீ, செம்பருத்தி தேநீர், மற்றும் லெமன் டீ, மிளகு தேநீர் ஆகியவற்றை பருகினால் உடல் எடை தானாகவே குறையும்.
திட்டமிட்டு பொருட்களை வாங்குதல் :
மளிகை பொருட்கள் கடைக்குள் நுழையும்போது தேவையற்ற பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் பொருட்கள் வாங்குவதற்கு முன்னரே தேவையான மற்றும் சத்தான உணவுப் பொருட்கள் அடங்கிய பட்டியலை தயாரிக்க வேண்டும். அதற்கு முன்பு வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது, என்பதையும் சரி பார்த்து விடுவது மிகவும் நல்லது. மேலும் பொருட்கள் காலாவதியாவதற்கு முன் அதனை பயன்படுத்த வேண்டும்.
காய்கறிகள் :
காய்கறிகளை அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டாலே எடை குறைவிற்கு அது மிகவும் உதவும். காய்கறிகளை வாங்கும் இடங்களைவிட, சந்தைகளில் விலை மிகவும் குறைவாக இருக்கும். நேரடியாக உள்ளூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கினால், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை குறைவாக விலைகளில் வாங்கலாம்.
கீரைகள் :
உணவில் தினமும் கீரை சேர்க்கும்போது கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து அதிகரிக்கிறது. மேலும், காய்கறிகளில் பீன்ஸ் கேரட் மற்றும் பயிறு வகைகளில் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. இது கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.