இரவில் ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா? இதை செய்துபாருங்கள்



to get deep sleep at night

ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களை காட்டிலும் கிவி பழத்தில் விட்டமின் சி சத்து பெருமளவு உள்ளது.

விட்டமின் சி மட்டுமின்றி விட்டமின்கள் ஏ, பி 6, பி 12, இ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் கிவியில் இருக்கிறது.

Health News

கிவி பழத்தில் பல்வேறு மருத்துவகுணங்கள் உள்ளது. 

கிவி பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் மீளலாம்.

இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி 
பழம் சாப்பிடலாம்.

இந்த பழத்தில் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. அதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.

ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் கிவி உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களும் இதனை சாப்பிடலாம். இது கருவின் வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.

ரத்த நாளங்கள், எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கும், பார்வைத்திறன் மேம்படவும் இது உதவுகிறது.

தினமும்  ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

கிவி பழத்தில் உள்ள ‘விட்டமின் ஈ’ சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரியும்.

Health News

ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு கிவி பழம். அவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம்.
மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்