மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சகல செல்வவளமும் பெற இன்றே உகந்த நாள்..! மறந்துவிடாதீர்..!
பிரதோஷம் என்றாலே விசேஷம் தான். அதிலும் சனிப்பிரதோஷம் என்றால் சொல்லவா வேண்டும். பொதுவாக சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் நினைத்த செயல்களை செய்து முடிக்கலாம் என்பார்கள். இருப்பினும் முக்கிய விசேஷம் தினங்களில் வழிபட்டு வரும் பொழுது அனைத்து விதமான பலன்களும் நம்மை வந்து சேரும்.
பிரதோஷம் என்றால் சிவனுக்கு மட்டும் இல்லை, நந்திக்கே மிகவும் உகந்த நாளாக சொல்லப்படுகிறது. இன்று சகல சிவா ஆலயங்களில் நந்தீஸ்வரனுக்கு அபிஷேகம் ஆராதனை மிகவும் விசேஷமாக செய்யப்படும்.
செல்வம் சேர, நோய் நொடியின்றி வாழ, தொழிலில் முன்னேற்றம் காண, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக, கடன் தொல்லை நீங்க, சகல வளமும் பெற இன்று சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். தடைகள் நீங்கி தடம் பதிப்பீர்கள்