3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
வேலையில் நாட்டமின்மை.. சோம்பேறி உணர்வு.. உஷார்.. வாழ்க்கையை நாசமாக்கும் நோய்.. மூளைக்கு எச்சரிக்கை.!
மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு நோய்களுக்கு இறையாகி விடுகின்றனர். இளம் வயதிலேயே மூளை சோர்வை சந்திப்பதால் உடலின் அனைத்து பாகங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பழக்க வழக்கங்கள் மூளையையும், மனதையும் வெறுமைக்கு தள்ளுகின்றன. கீழ்காணும், சில பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால் இள வயதிலேயே இப்படிப்பட்ட நோய்க்கு நீங்கள் ஆளாகலாம்.
அப்படிப்பட்ட நிலையில் மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, நினைவாற்றல் பாதிக்கப்பட்டு உங்கள் எதிர்காலத்தையே இழக்க கூடிய அளவுக்கு மோசமான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கீழ்காணும், பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்வது உங்கள் வாழ்க்கையை சீரமைக்க உதவும்.
* கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்கள் மிகுந்த தீங்குக்கு ஆளாகின்றனர். இந்த மாதிரி நீண்ட நேரம் ஒளிதிரைகளை பார்ப்பதால் மூளை நரம்புகள் தாக்கப்படுகின்றன. இதனால், தலைவலி, கண் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படும். இன்றைய கால இளைஞர்கள் பெரும்பாலும் இப்படி திரை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர். மேலும், இது போன்ற சாதனங்களை பயன்படுத்தி தான் அவர்கள் பணிபுரியும் நிலையும் இருக்கிறது. எனவே ,இதற்கு இடையில் அவர்கள் ஓய்வு எடுப்பது மிக முக்கியம்.
* தூக்கமின்மை என்பது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு. இது பற்றி எல்லாம் நன்றாக தெரிந்திருந்தும் கூட இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் மிகவும் மோசமான பழக்கங்களை கொண்டுள்ளனர். தூக்கமின்மை காரணமாக மனநிலை மாற்றங்கள் கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகளை இது ஏற்படுத்தும். எனவே, உடலுக்கு தேவையான தூக்கத்தை அனைவரும் பெற வேண்டும்.
* அதிகப்படியான மன அழுத்தம் பல்வேறு பாதக விளைவுகளை கொடுக்கிறது. கவலை மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம் அல்லது சுவாச பயிற்சி மேற்கொள்வது அவசியம். இன்றைய கால இளைஞர்கள் இதை பொருட்படுத்தாமல் விட்டு விடுவது உங்கள் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கும்.
* ஆரோக்கியம் இல்லாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், நிறைய கொழுப்பு, சர்க்கரை கொண்ட உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவது மூளையை பெரிய அளவில் பாதிக்கும். இது போன்ற உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது மூளை வீங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. மேலும் நியூரான்களை இது சேதம் செய்வதால் மோசமான விளைவுகளை உடலில் ஏற்படுத்தும். எனவே நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* உடல் உழைப்பு செய்யாமல் இருப்பது. தற்போதைய காலகட்டத்தில் கணினி மயமாக்கப்பட்டு விட்டதால் உட்கார்ந்த இடத்திலேயே பலரும் வேலை செய்யும் நிலை இருக்கிறது. அவர்கள் காலை, மாலையில் உடற்பயிற்சி செய்வது அல்லது வீட்டில் ஏதாவது தோட்ட வேலைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை மேற்கொள்ளும் போது மனநிலை சீராக இருக்கும்.