மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதி அளித்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
நாடு முழுவதும் கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை அடைந்து ஒரு பவுன் தங்கம் 44 ஆயிரத்தை கடந்து காணப்பட்டு வருகிறது.
எவ்வளவு தான் தங்கம் விலை உயர்ந்தாலும் அதை வாங்குவோர் எண்ணிக்கை மட்டும் குறைந்தப்பாடில்லை. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5, 560க்கும் சவரன் ரூ.44, 480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.