மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சில நிமிடங்களில் சளியை குணமாக்கும் கற்பூரவள்ளி இலையை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா.?
பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் செடி தான் கற்பூரவள்ளி செடி. மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த கற்பூரவள்ளி இலையின் சாற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் சரியாகும். உடல் சூட்டைத் தணிக்கும். தலைவலியை குணப்படுத்தும்.
மேலும் இதன் சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மார்புச்சளி நீங்கும். மேலும் வயிறு மற்றும் இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கு வெளிப்பூச்சாகவும் இதன் சாற்றை பயன்படுத்தலாம்.
இதனுடன் இஞ்சி கலந்து செய்யப்படும் தேநீர் மிகவும் ஆரோக்கியமானது. கற்பூரவள்ளி இலையை சுத்தம் செய்து நறுக்கிக்கொண்டு, இஞ்சியையும் தோல் சீவி நறுக்கி கொள்ளவேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தேவையான நீர் ஊற்றிக் கொதிக்க விடவேண்டும்.
பின் அதில் கற்பூரவள்ளி இலை, இஞ்சி மற்றும் டீத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, மிதமான சூட்டில் குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமான பானமாகும்.