மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புலியை தத்தெடுத்த சீமராஜா..! குவியும் பாராட்டு மழை..!
நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து அனு என்ற பெண் புலியை ஆறு மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது முன்னனி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் வெளியான சீம ராஜா
தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குனர் ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் இயக்கும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களை காக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்று பெண் புலிக்கொடியை தத்தெடுத்துள்ளார். இதற்காக 2.12 லட்சம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பூங்காவில் ஊர்வன, பரப்பன, பாலூட்டிகள், விலங்குகள் என பலவகையான உயிரினங்கள் உள்ளது. இதை யார் வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம் இதற்கு பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு ஒரு நாள் வழங்கும் உணவிற்கான செலவுத்தொகையை கட்ட வேண்டும்.
நாளொன்றுக்கு ஒரு புலிக்கு ரூ.1196 ம் மனித குரங்குக்கு ரூ.550 ம் செலவாகிறது. இதுபோல மேலும் பல பொதுமக்கள் தத்தெடுத்தல் அது பூங்காவில் உள்ள உயிரினங்களின் பராமரிப்புச் செலவுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.