சட்டுன்னு கோபப்படுபவரா நீங்கள்!? இதை கட்டாயம் படிங்க.!



what-anger-does-to-your-body

சரியாக கையாள தெரிந்தால், கோபம் மிகச் சிறந்த உணர்வாகும். சோகம், வலி, பயம், அவமானம், தோல்வி, முக்கியமாக இயலாமை போன்ற உணர்வுகள் சில சமயம் கோபமாக வெளிப்படுகிறது.  கட்டுக்கடங்காத நெருப்பு எப்படி தன்னை சுற்றியுள்ள அனைவரையும் பற்றிக்கொள்ளுமோ, அது போல் கோபம் தனது இணையர், குழந்தை, உறவினர்கள் என்று அனைவருக்கும் அழிவையும், மனக்கசப்பையும் உண்டாக்கும். 

Anger

அதிகமாக கோபப்படும் போது அட்ரீனல் சுரப்பிகள், அட்ரினலின் மற்றும் கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்களால் உடலை நிரப்புகின்றது. இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும், சுவாசமும் அதிகரிப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, உடல் வியர்க்க தொடங்குகிறது. நிர்வாகிக்கப்படாத கோபம், பல குறுகிய மற்றும் நீண்ட கால பிரச்சனைகளை உருவாக்குகின்றது.

கோபம் நாளடைவில் தலைவலி, வயிற்று வலி, அஜீரண தொந்தரவுகள், தூக்கமின்மை, அரிக்கும் தோலழற்சி நோய் (Eczema), மனச்சோர்வு, அதிகரித்த கவலை, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை உருவாக்குகின்றன. அதிகமான கோபத்தை வெளிப்படுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் இரட்டிப்பாகிறது என்ற மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக கோபத்தால் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாகி அல்சர் ஏற்படக்கூடும்.

Anger

நீங்கள் கோபத்தில் வசைபாடும் நபராக இருந்தால் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கோபப்படும் மனிதன் தனது நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறான் என்றும் நோய் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர். நுரையீரலின் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. உங்கள் வாழ்நாட்களையும் குறைக்கிறது.

கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை போன்றவை உதவும்.