என்னது! இந்த பழக்கங்கள் எல்லாம் நம் மூளையை பாதிக்குமா.? அப்போ இனிமே இதை கண்டிப்பா செய்யாதீங்க.!



what-do-all-these-habits-affect-our-brain-then-definite

நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் தலைமை செயலகமாக விளங்குவது மூளை. இவை அறிவாற்றல், கற்றல், சிந்தனை திறன், ஞாபகம், உயிருள்ள அனைத்து  விஷயங்கள் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைவது மூளைதான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையை நம் அன்றாட பழக்கவழக்கங்கள் கூட எளிதில் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவையாவன 1) காலையில் உணவு உண்பதை தவிப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவில் சர்க்கரை இருக்கும். ஆகவே இவை மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், சக்தியும் கொடுக்காமல் மூளையின் அழிவுக்கு காரணமாகின்றன. 2) மிக அதிகமாக சாப்பிடுவது கூட மூளையின் பாதிப்புக்கு வித்திடுகிறது. அதாவது இது மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுக காரணமாகி பின் மூளையின் சக்தி குறைவுக்கு காரணமாகிறது.

These habits

3) புகைப்பிடித்தல் மூளை பாதிப்பில் பெரிய பங்கு வகிக்கிறது. அதாவது மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் நோய் உருவாதற்கும் புகைப்பிடித்தல் காரணமாகிறது. 4) நிறைய சர்க்கரை சாப்பிடுவது நமது உடலில் புரோட்டின் சேர்வதை தடுக்கிறது. இதுவும் ஒரு வகையில் மூளை பாதிப்பிற்கு வித்திடுகிறது.

5) மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் தேவையான ஆக்சிஜன் மூளைக்கு செல்வது தடைப்படுகிறது. இதனால் மூளை பாதிப்படையும். 6) சரியான தூக்கமின்மை கூட மூளையை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. 7) மேலும் தலையை மூடிக்கொண்டு தூங்குவதன் மூலம் போர்வைக்குள் கரியமில்லா வாயு அதிகரிக்கிறது. இவை நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. இதனால் குறைவான ஆக்சிஜனை நாம் சுவாசிக்கும் போது முளை பாதிப்படைகிறது.

8) நாம் நோயிற்று இருக்கும் காலத்தில் மூளைக்கு அதிகப்படியான வேலை கொடுப்பதும், அதிதீவிரமாக படிப்பதும் மூளையை பாதிக்கும் என்று கூறுகின்றனர். 9) அதோடு மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் மூளைக்கு மிக நன்றாகும். இவ்வாறு இந்த பழக்கங்களை தவிர்ப்பதன் மூலம் நம் மூளையை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.