ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"தயிரை அடிக்கடி சூடு பண்ண கூடாது" ஏன் தெரியுமா.?
தினசரி உணவுகளில் மிகவும் முக்கியமானது தயிர். நம் உணவில் நாம் பல்வேறு வழிகளில் தயிரை பயன்படுத்துகிறோம். தயிரின் தனித்துவமான கிரீமி சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இதில் உள்ள ஏராளமான ப்ரோபயாட்டிக்குகள் உடலுக்கு நன்மை தருகின்றன.
மேலும் தயிரை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மேலும் குடலில் நன்மை தரும் நுண்ணுயிர்களை வளர்க்க உதவும். மேலும் தயிர் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆனால் தயிரை சூடாக சமைத்து உண்ணக்கூடாது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப் படவில்லை. தயிரை சூடாக்குவதால் அதிலுள்ள புரதங்கள் சிதையும் வாய்ப்பு அதிகம். இது தயிரின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் சூடுபடுத்துவதால் தயிரில் உள்ள ஈரப்பதம் குறைந்துவிடும்.
மேலும் தயிரை சூடேற்றும்போது அதிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கொல்லப்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் தயிரை சமைப்பது அதன் சுவையையும் பாதிக்கலாம். சூடேற்றிய பிறகு தயிரின் சுவை வித்தியாசமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.