#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தை பிறப்பிற்கு பின் தொடர்ந்து முதுகு வலியா.? என்ன காரணம் தெரியுமா.?
இப்போதெல்லாம் முதுகு வலி இல்லாத நபர்களே இல்லை எனலாம். வாழ்க்கை முறை மாற்றத்தால் பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும், பெண்களும் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்.
சில நேரங்களில் தவறான நிலையில் அமர்வது கூட முதுவலிக்கு காரணமாகிறது. முகவலியிலிருந்து விடுபட, தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். உணவுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளான மீன், பாதாம், அக்ரூட் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை உணவில் பயன்படுத்தலாம்.
மஞ்சள், இஞ்சி, பூண்டு, லவங்கப்பட்டை, முட்டை, பால், பருப்பு, புரதச்சத்துள்ள உணவுகள், பச்சைக்காய்கறிகள், கீரைகள், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள், மற்றும் சிட்ரஸ் பழங்களான அன்னாசி, பெர்ரி, செர்ரி, திராட்சை ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இவைகள் குழந்தை பிறப்பிற்கு பின்னால் வரும் முதுகு வலிக்கும் உதவியாக இருக்கும்