மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களா நீங்கள்?.. உண்ணவேண்டிய உணவுகள் குறித்து தெரிஞ்சுக்கோங்க..!!
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பூண்டு :
பூண்டு பற்களை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் ஒருவித மணம் காரணமாக குழந்தை அதிக நேரம் பால் அருந்துவதாக ஒரு ஆராய்ச்சி முடிவில் தெரிகிறது. குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் மேற்குறிப்பிட்ட முறையை முயற்சிக்கலாம்.
பப்பாளிக்காய் :
பப்பாளி காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்,கி லேசாக வேகவைத்து சாப்பிடுவதால் பால்சுரப்பு அதிகரிக்கும். பப்பாளிக்காயை சாப்பிட்டவர்களின் தாய்ப்பாலில் அதிகஅளவு "வைட்டமின் ஏ" இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
வெந்தயம் :
குழந்தை பிறந்த சில நாட்களில் தாய்மார்களுக்கு அதிக அளவில் பால் சுரக்க, வெந்தய விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிட கொடுக்கலாம். வெந்தயத்தின் "Diosgenin" பால் சுரப்பை அதிகமாக்குகிறது. வெந்தயம் சாப்பிடுவதன் மூலம் கருப்பையை சுருங்க செய்து, அதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டு வந்துவிடும். அமெரிக்காவின் "ஃஎப்டிஏ" தாய்மார்களுக்காக வெளியிட்ட உணவு பட்டியலில் வெந்தயம் இடம்பெற்றுள்ளது.
ஆமணக்கு இலை :
ஆமணக்கு இலைக்கு பால் பெருக்கும் திறன் உண்டு. தாய்மார்களுக்கு ஆமணக்கு இலைகளை குடிநீராக கொடுக்க கொடுக்கலாம் அல்லது இலையை வதக்கி மார்பில் போட்டுவர பால் சுரப்பு அதிகரிக்கும். இதுபோல காட்டாமணக்கு மற்றும் இலுப்பை இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். மேலும் விளக்கெண்ணையில் வெற்றிலையை வதக்கி மார்பில் கட்டி வர பால் சுரப்பு தாய்மார்களுக்கு அதிகமாகும்.
சதாவேரி (தண்ணீர்விட்டான் கிழங்கு) :
இதில் உள்ள "Shatavarin"என்ற வேதிப்பொருள் அதிகளவு பால் சுரப்பை தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள "Tryptophan" எனும் அமீனா அமிலம் புரோலாக்டின் மூலமாக தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் கொழுப்பு சத்தை கரைத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. சதாவேரியில் செய்யப்படும் லேகியம் தாய்ப்பால் சுரப்பை தூண்டுவதுடன், சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கிறது. மகப்பேருக்கு பின் தாய்மார்களுக்கு கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர இது உதவுகிறது.