மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாய்கள் டயர் & மின்கம்பத்தில் சிறுநீர் கழிப்பதற்கு பின் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!
நாம் வெளியில் செல்லும்போது நாய்கள் வாகன டயர் மற்றும் மின் கம்பங்களில் சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்போம். வீட்டில் வளர்க்கின்ற நாயை கூட வெளியில் அழைத்துச் செல்லும் போது அவை இதை செய்வதை பார்த்திருக்கலாம். இது நாய் இனத்திற்கு தற்செயலாக நடக்கக்கூடிய விஷயம் இல்லை. இதற்குப் பின் சில காரணங்கள் இருப்பதாக நாய் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுபோல கார் டயர் மற்றும் கம்பத்தில் நாய்கள் சிறுநீர் கழிக்கும் போது தங்களது ஏரியாவை குறிப்பிடுகின்றன. இது எனது இடம் என்பதை தனது நண்பர்களுக்கு அது கூறுகிறது. எனவே, மற்ற நாய்களும் அதே இடத்தில் இப்படி சிறுநீர் கழித்து தங்களது முத்திரையை பதிக்கின்றன.
எனவே நாய்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு ஏற்படுத்தி கொள்ள இது உதவுகிறதாம். பெரும்பாலும் செங்குத்தான பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை தான் நாய்கள் விரும்புகின்றன. இது நாய்களின் மூக்குக்கு அருகில் இருப்பதால் வசதியாக முகர்ந்து பார்ப்பதற்காக தான் இப்படி நாய்கள் செங்குத்தான இடங்களில் சிறுநீர் கழிக்கின்றன.
மற்ற நாய்கள் இதை எளிதாக கண்டறிந்து நண்பர்களை அடையாளம் காண உதவுகிறதாம். மேலும், கார் டயர்களில் நாய்கள் சிறுநீர் கழிப்பதற்கு காரணம் நாய்களுக்கு ரப்பர் வாசனை பிடிக்குமாம். எனவே, தான் வாகன டயர்களில் நாய்கள் விருப்பம் கொண்டு சிறுநீர் கழிக்கின்றன. ரப்பர்களில் சிறுநீரின் வாடை நீண்ட நேரம் இருக்கும் தரையில் அது நீடிக்காதாம்.