மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாக்கில் எச்சி ஊற வைக்கும் நெத்திலி மீன் வருவல்.!! அடுத்த முறை இப்படி செஞ்சி பாருங்க.!!
மீன்களில் தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.பலருக்கு சிக்கன், கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு மீன் வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம். வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் வருவல் ரொம்ப சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 500 கிராம் நெத்திலி, தேங்காய் எண்ணெய் வறுக்கத் தேவையான அளவு, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடி, 1/2 ஸ்பூன் சிவப்பு பொடி, 1/2 ஸ்பூன் மல்லி பொடி, 1/2 ஸ்பூன் மிளகுப் பொடி, 1 சிட்டிகை வெந்தையப் பொடி, 1/2 துண்டு இஞ்சி இடித்தது, 4 பல் பூண்டு இடித்தது, கரு வேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: மீனை சுத்தம் செய்துகொள்ளுங்கள் மேலே ஊற வைக்கக் குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் பதத்திற்குக் கலந்துகொள்ளவும். கலந்ததும் அதில் சுந்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் பிரட்டிக் கொள்ளவும்.
அதை சிறிது நேரம் ஊற வைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும், ஊற வைத்துள்ள மீன் துண்டுகளைப் போடவும். மீன் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அப்போதுதான் மொறு மொறுவென இருக்கும். அவ்வளவுதான் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.