மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Yummy.. நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவையான எக் சாண்ட்விச் ரெசிபி.!!
மாலை நேர ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான எக் சாண்ட்விச் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்: 2 முட்டை, 1 பெரிய வெங்காயம், 1 குடைமிளகாய், 1 தக்காளி, 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ், 1 டீஸ்பூன் தக்காளி சாஸ், 1 டீஸ்பூன் ஹெர்ப்ஸ், 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், 1 டீஸ்பூன் ஹெர்ப்ஸ், 1 ஸ்பூன்சில்லி ப்ளேக்ஸ், 1 டீஸ்பூன் பெரி பெரி மசாலா
செய்முறை: முதலில் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் ஒரு பவுளில் மயோனைஸ், தக்காளி சாஸ், பெரி பெரி மசாலா, ஹெர்ப்ஸ், சில்லி ப்ளேக்ஸ் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் மற்றொரு பவுளில் முட்டை, உப்பு, பெரி பெரி மசாலா சேர்த்து நன்கு கலந்து பின் முட்டையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு பிரெட்டில் நாம் கலந்து வைத்துள்ள மயோனைஸை தடவி அதன்மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய், தக்காளி இவற்றை வைத்து அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ் தூவி, பின் பொரித்து வைத்துள்ள முட்டையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி விடவும். பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான எக் சாண்ட்விச் தயார்.