#BudgetSession2023-24: வெளிமாநில தொழிலாளர்களுக்கும் "மக்களை தேடி" மருத்துவத்தின் கீழ் சிகிச்சை - அமைச்சர் அறிவிப்பு..!!



2023-24-budget-session-tamilnadu

2023-24 பட்ஜெட் தாக்கல் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் இன்று தொடங்கியது. அறிவிப்புகள் பின்வருமாறு, 

பறவைகளின் பாதுகாப்பை பேணவும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மரக்காணத்தில் ₹25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும். ஈரோட்டில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' அமைக்கப்படும். இது மாநிலத்தின் 18-வது சரணாலயமாக இருக்கும்.

அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். 

tamilnadu political

கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ₹2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும். 5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ₹2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹30,000 கோடி கடன் வழங்கப்படும். 

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ₹1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களும் தமிழக அரசின் மக்கள்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெற வழிவகை செய்யப்படும்.