திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: நடிகை & பாஜக எம்.பி கங்கனா கன்னத்தை பதம்பார்த்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்; அதிரடி உத்தரவு.!
சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத்தை, சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது.
நடிகை, டெல்லியில் வேளாண் சட்டமசோதா விவகாரத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தானியர்கள் என வருணித்ததாக குற்றசாட்டு முன்வைத்து, பெண் அதிகாரி கங்கனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணி - எடப்பாடி பழனிச்சாமி இடையே உட்கட்சி பூசல்? - முக்கிய புள்ளியின் பரபரப்பு பேச்சு.!
CISF constable Kulwinder Kaur slapped Mandi MP Kangana Ranaut.
— Sunanda Roy 👑 (@SaffronSunanda) June 6, 2024
Why? Because She was upset with her on her previous remarks about Farmer's Protest.
They don't even care about their position and duty.
She must be arrested. pic.twitter.com/B3USt2TCCi pic.twitter.com/g9igQqndLy
பெண் அதிகாரி பணியிடைநீக்கம்
இந்த விஷயம் குறித்த சர்ச்சை சம்பவம் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மேலும், நடிகை கங்கனா ரானாவத்தும் தனது சமூக வலைத்தளங்களில் இதனை விடியோவாக வெளியிட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து, சர்ச்சை விஷயம் குறித்து சிஐஎஸ்எப் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நடிகை கங்கனாவை அடித்ததாக கூறப்படும் பெண் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டோரை ரூ.100, 200 க்கு வந்தவர்கள் என விமர்சித்த நிலையில், அதில் எனது தாயும் போராடினார் என பெண் அதிகாரி தாக்கியதாக தெரியவருகிறது.
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024
இதையும் படிங்க: கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!