திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆப்ரேஷன் பாஜக... 'களை' எடுக்கப்படும் முக்கிய தலைகள்.!! அண்ணாமலை அதிரடி.!!
தமிழகத்தில் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக கட்சி இணங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அந்தக் கட்சியில் உள்ள குற்றப் பின்னணி கொண்டவர்கள் களை எடுக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழிசை சௌந்தர்ராஜனின் பேட்டி
தமிழக முன்னாள் பாஜக தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இவரது இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.
குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீது நடவடிக்கை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி குற்றப் பின்னணி கொண்டவர்களை களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக ஜூன் 23ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. மேலும் தர்மபுரி ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரமும் உச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BigBreaking: கள்ளக்குறிச்சி விஷசாராய மரண விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000/-, கல்விச்செலவு ஏற்பு - அதிமுக அறிவிப்பு.!
பாஜக மாநில துணைத் தலைவரின் கருத்து
குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுத்தாலும் எதிர்காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற ஒரு கருத்து மக்களிடம் நிலவி வருகிறது. இதுகுறித்து பதிலளித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி" கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் மீது தகுந்த ஆதாரங்களை திரட்டிய பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார். கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியான நேரத்தில் எடுத்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அதிமுக பாஜக கள்ள சாராயம் விற்றதா.? திமுக-வின் ஆர்.எஸ் பாரதி பேட்டியால் சர்ச்சை.!!