3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
விஜயகாந்துடன் அதிமுக பிரபலங்கள் சந்திப்பு; மெகா கூட்டணி குறித்து வெளியான தகவல்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் ஏற்கனவே தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், தற்பொழுது விஜயகாந்தின் தேமுதிக கட்சியை கூட்டணியில் இணைத்துக்கொள்ள அதிமுக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று விஜயகாந்தின் இல்லத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜயகாந்தை நேரில் சந்தித்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயகாந்த் மெகா கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.
விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (04.03.2019) இன்று எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக, நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இந்நிகழ்வில் மீன் வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களும், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்களும் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களும், திரு.ப.பார்த்தசாரதி, Ex:MLA., திரு.எ.எஸ்.அக்பர் அவர்களும் உடன் இருந்தனர்" என பதிவிட்டுள்ளார்.