மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்?.. நேர்ல பார்த்தது குத்தமாங்க?..!
அதிமுக முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணையவுள்ளதாக புரளி தகவல் கிளப்பிவிடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இவர் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு வருகை தந்திருந்த பாஜக தலைவர் ஜே.பி நட்டாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மரியாதையை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. இதனைக்கண்ட எதிர்கட்சிகளை சேர்ந்த ஆதரவாளர்கள் பலரும் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சி மாற போகிறரா? என்ற எண்ணத்துடன் போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.