திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அனல் பறக்கும் பிரச்சாரம்.! தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் அப்பொழுது பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் வெற்றிக்கனியை பறிக்க ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் என பலரும் சுற்றுபயணம் மேற்கொண்டு தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் தமிழகம் வரவுள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சாரம் மேற்கொள்ள இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளார். ஏப்ரல் 4ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கையிலும், 5 ஆம் தேதி சென்னையிலும் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.