மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! டி.டி.வி.தினகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்.!
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட உள்ளது. அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன.
அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அமமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இவ்வாறான நிலையில், அமமுக-வின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
நம்முடைய இலக்கை மனதில் வைத்து தமிழகத்தைக் காத்திடவும், துரோகத்தை வீழ்த்திடவும் நம்முடைய வெற்றிக் கூட்டணிக்கு பலம் சேர்க்கிற வகையில் ஏற்கனவே உள்ள தோழமைக் கட்சிகளுடன் சேர்த்து தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடனும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 14, 2021
இந்நிலையில், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமமுக-தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் பெற்று கொண்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு. pic.twitter.com/CI3sfH01GC
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 14, 2021
நேற்று மாலை 6.30 மணிக்கு கூட்டணி அறிவிப்புடன், தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.