மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள்.! டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில், இன்று அ.தி.மு.க., திமு.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்தநிலையில்,15 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் pic.twitter.com/R2UVW0KaXA
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 10, 2021
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:
ராசிபுரம்(தனி) தொகுதியில் அன்பழகன் அவர்களும், பாபநாசம் தொகுதியில் பெ.ரெங்கசாமி அவர்களும், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பி.பழனியப்பன் அவர்களும், சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழன் அவர்களும், சோளிங்கர் தொகுதியில் என்.ஜி.பார்த்திபன் அவர்களும், வீரபாண்டி தொகுதியில் எஸ்.கே.செல்வம் அவர்களும், அரூர் தொகுதியில் ஆர்.ஆர்.முருகன் அவர்களும், பொள்ளாச்சி தொகுதியில் கே.சுகுமார் அவர்களும், புவனகிரி தொகுதியில் கே.எஸ்.கே.பாலமுருகன் அவர்களும், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆர். மனோகரன் அவர்களும், மடத்துக்குளம் தொகுதியில் சி.சண்முகவேலு அவர்களும், திருப்பத்தூர்(சிவகங்கை) தொகுதியில் கே.கே.உமாதேவன் அவர்களும்,
உசிலம்பட்டி தொகுதியில் ஐ.மகேந்திரன் அவர்களும், கோவை தெற்கு தொகுதியில் துரைசாமி(எ) சாலஞ்சர் துரை அவர்களும், தருமபுரி தொகுதியில் டி.கே.ராஜேந்திரன் அவர்களும் போட்டியிடவுள்ளனர்.