53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
2001-ல என்ன நடந்துச்சுனு ஞாபகம் இருக்குதா.?! எடப்படியை பார்த்து பகிரங்க கேள்வி கேட்ட அன்புமணி.!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி
திருக்கழுக்குன்றம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் பேசிய அன்புமணி, "அதிமுகவிற்கு பாமக துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பல இடங்களில் கூறி வருகிறார். பல இடங்களில் அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது பாமக தான்.
எந்த கட்சிக்கும், எந்த அமைப்புக்கும் பாமக ஒருபோதும் துரோகம் செய்யாது. திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுக்கும் மாறி மாறி பாமக தான் உயிர் கொடுத்து வருகிறது. 1996ல் ஊழல் குற்றச்சாட்டுக்காக இபிஎஸ், ஜெ. சிறைக்கு சென்றாரகள். அவர் வெளியில் வந்த பின்னர் அவரது அரசியல் வாழ்வே முடிவுக்கு வந்துவிட்டது என்றார்கள். அப்போது எடப்பாடிக்கும் அவருடைய கட்சிக்கும் உயிர் கொடுத்தோம். கடந்த 2001 இல் கூட முதலில் பாமக கூட்டணிக்கு வந்ததால் தான் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வந்தார்கள். 2001 இல் சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை முதலமைச்சராக அமர வைத்ததே நாங்கள் தான்.
கடந்த 2019-ம் இதே நிலைதான் நிலைதான். நாங்கள் இல்லையென்றால் எடப்பாடி முதல்வர் பதவியையே இழந்திருப்பார். இருப்பினும் இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறி சரியாக கொடுக்கவில்லை. 4 மணிக்கு தேர்தல் அறிவிக்கப்பட அதற்கு முன்பு தான் அவர் இட ஒதுக்கீடை அறிவித்தார். அதற்குப் பின் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அவர் எங்காவது பேசினாரா.? அவர் கட்சியின் மற்றவர்களும் இதைப் பற்றி பேசவில்லை. உங்களுடன் கூட்டணிக்கு வந்தால் தியாகிகள், இல்லையென்றால் துரோகிகளா.?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.