மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"18 தற்கொலைகளுக்கும் ஆளுநர் தான் பொறுப்பு" - ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அன்புமணி ஆளுநர் மீது பாய்ச்சல்..!!
தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை எதிர்த்து அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது அந்த தடையை உடைத்தது.
இதனையடுத்து திமுக தலைமையிலான அரசு மீண்டும் ஆன்லைன் ரம்மி தடைசட்டத்தை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த நிலையில், ஆளுநர் அதனை ஒப்புதல் அளிக்காமல், அது குறித்த பதிலும் தெரிவிக்காமல் நேற்று வரை காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று, மாநில அரசுக்கு ஆன்லைன் ரம்மி தொடர்பான விளையாட்டுகளை தடை விதிக்க அதிகாரம் இல்லை என்றும், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அதனை திருப்பி அனுப்பியிருந்தார்.
இதற்கிடையே ஆன்லைன் ரம்மியால் 18 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், அதற்கு ஆளுநரே முழுபொறுப்பு என அன்புமணி தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்தவர், "ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச்சட்ட மசோதாவை 45 நாட்களுக்குள் ஆளுநர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர் காலம் தாழ்த்தி மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார். மாநில அரசுக்கு முடிவெடுக்க தடை விதிக்க அதிகாரமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஏற்பட்ட மரணங்களுக்கு அவரே பொறுப்பு" என்று காரசாரமாக தெரிவித்துள்ளார்.