#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாஜகவில் புதிய நிர்வாகிகளை நியமித்த காயத்ரி ரகுராம்..! செல்லாது செல்லாது... அதிரடியாக ரத்து செய்த அண்ணாமலை.!
திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார். இந்தநிலையில் இவர் கடந்த பிப், 1ஆம் தேதி காயத்ரி ரகுராம் நிர்வாகிகளை மாற்றுவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
காயத்ரி ரகுராமின் லெட்டர் பேடில் வெளியிடப்பட்டிருந்த அந்த அறிவிப்பில், பாஜகவுக்கும் கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கலாசார பிரிவில் இருந்து சில மாநிலச் செயலாளர்களை நீக்குவதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், புதிதாக எட்டு பேரை கலாசார பிரிவின் மாநிலச் செயலாளர்களாக நியமிப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
மாநில அளவில் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தேசிய தலைமையின் ஒப்புதலுடன் தான் நடக்க வேண்டும் என்ற கட்சி விதிக்கு மாறாக காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகிகளை நீக்கியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காயத்ரி ரகுராமின் இந்த அறிவிப்பு செல்லாது என்றும் பழைய நிர்வாகிகளே தங்கள் பதவியில் தொடர்வார்கள் என்றும் பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “01.02.2022 அன்று கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி இல்லாமல், கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது என அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், தலைவரின் முடிவை ஏற்பதாக பதிவு போட்டுள்ளார்.
I accept My President’s @annamalai_k decision. Thank you for the support🙏 @blsanthosh @CTRavi_BJP @ReddySudhakar21 @KesavaVinayakan pic.twitter.com/uA6sDMf8mG
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) February 3, 2022