மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: உதவி செய்த நண்பர்களை ஆப்பு வாங்க வைத்த அண்ணாமலை.. பகிரங்க மன்னிப்பு கேட்ட சோகம்..! காரணம் இதுதான்.!
அண்ணாமலை வெளியிட்ட தகவலால் அவருக்கு உதவி செய்த தனிப்பட்ட நண்பர்களின் தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
ஏப்ரல் 14ம் தேதியான நேற்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது ரபேல் கைக்கடிகாரத்திற்கான ஆவணங்களுடன், திமுகவினரின் ஊழல் பட்டியல் என ரூ.1.3 இலட்சம் கோடிக்கான விபரங்கள் தொடர்பான தகவலையும் வெளியிட்டு இருந்தார். அப்போது, அவர் எனது நண்பர்களே வீட்டின் வாடகை, உதவியாளர்கள் சம்பளம் ஆகியவற்றை வழங்குவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில், "ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன்.
அவற்றின் விவரங்கள் https://enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.
எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன். திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர, வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை.
தமிழகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றமும், அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும், திமுக போன்ற ஊழல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை சாத்தியமில்லை. திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவர்கள் மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பொறுப்பை இனியாவது உணர வேண்டும். எனவே, இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!" என்று கூறியுள்ளார்.
தனது தரப்பு நியாயத்தை தெரிவிக்க முயற்சித்த அண்ணாமலை, அவர்களது நண்பர்களின் தரவுகளை பக்கம் பக்கமாக சோதித்து, அவர்களின் பெயர்கள் உட்பட விபரங்களை மறைத்து வெளியிட்டு இருக்க வேண்டும் என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.