மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#LokSabha | "பாஜகவின் முடிவு தெற்கிலிருந்து எழுதப்படும்..." முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.!!
18-வது பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது.
இந்தியாவில் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் முதல் கட்ட வாக்குப் பதிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைந்து இருக்கிறது. இந்தப் பாராளுமன்ற தேர்தலோடு பாஜகவின் ஆட்சி தெற்கிலிருந்து அஸ்தமனமாகும் என பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2019 ஆம் வருட பொது தேர்தலில் மோடி பிரபலமான மனிதராக இருந்தார் அப்போது பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியால் 303 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. தற்போது பாஜகவின் மோசமான ஆட்சி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. மோடி என்ற பிம்பம் சிதைந்து போய்விட்டது.
எனவே பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது வெறும் கனவாகவே இருக்கும். மோடி மீண்டும் பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக்கிறார். பொருளாதார நெருக்கடி விலைவாசி ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியின் முடிவு தெற்கிலிருந்து எழுதப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.