மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Loksabha2024: காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி.!! வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரம்.!!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. பதினெட்டாவது பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர்.
தேர்தல் வேலைகள் ஒருபுறம் நடைபெற்றிருக்க மறுபுறம் அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எம்பி ஒருவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது அங்குள்ள அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் நிஷாத். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முசாபர்பூர் தொகுதி எம்பி ஆக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முசாபர்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு அஜய் நிஷாத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவின் முக்கியமான எம்பி காங்கிரஸில் இணைந்திருப்பது கட்சி உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.