மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Election2024 | "வாஷிங் மிஷின் பாஜகவும் மோடியின் குடும்பமும்" சொல்லி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்.!!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பு எட்டி இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி உள்ளனர். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது.
மூன்றாவது முறையும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தீவிரமான பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி அரசு இயந்திரங்களை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறது என்பது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி தனது X வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ஸ்டாலின். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர் கடந்த 10 வருட பாரதிய ஜனதா ஆட்சியில் அமலாக்கத்துறை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவை ஏவல் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!
— M.K.Stalin (@mkstalin) April 3, 2024
பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே… pic.twitter.com/zpqOag2tHB
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த 25 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களில் 20 பேரின் வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 பேரின் வழக்கு முடியும் நிலையில் இருக்கிறது. இவர்கள் கட்சியில் சேர மறுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுபவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால் நிரபராதியாகி விடுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி வாஷிங் மெஷின் போல அனைவரின் அழுக்கையும் சுத்தம் செய்கிறது. அதேபோல அமலாக்கத் துறை, புலனாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை தான் மோடியின் குடும்பம் போன்று செயல்படுகிறது. இவர்களை வைத்துத்தான் எதிர்க்கட்சியினர் மிரட்டப்படுகிறார்கள் என ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.