"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
முதல்வர் அலுவலகத்திற்கு அல்கொய்தா பெயருடன் வெடிகுண்டு மிரட்டல்; பகீர் சம்பவம்.!
சர்வதேச அளவில் ஒடுங்கி இருந்த பயங்கரவாத செயல், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் போர்ப்பதற்றம், உலகப்போர் 3 க்கு வித்திடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வேலைக்கு சென்றவர்களில், லெபனான் நாடுகளில் இருப்போரை தாயகம் அழைத்து அந்தந்த நாடுகள் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த சில மாதமாகவே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முறியடிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த பாமக தலைவர் அன்புமணி.!
வெடிகுண்டு சோதனை
இந்நிலையில், பீகார் மாநில முதல்வரின் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடித்துச்சிதரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய குழு எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பீகார் முதல்வர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும், சோதனையில் வெடிகுண்டு கிடைக்காத காரணத்தால், மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: நா.த.க - திமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை; உண்மையை போட்டுடைத்த சீமான்.. பரபரப்பு தகவல்கள்.!