மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை!.. முதற்கட்ட விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணன் அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், தேவராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திரும்பிய உறவினர்கள் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரங்களாக தேவராஜ் வயிற்று வலி நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், கடுமையான வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.