திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
'அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சால்'.., தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் வாழ்த்து!!
இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள். இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு மாவட்ட சார்பாக பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்"-
"இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர்
திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று அதில் அவரது வாழ்த்தை பதிவு செய்திருந்தார்.