ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தமிழ் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்கு!.. போலீஸ் பாதுகாப்பு; கண்காணிப்பு தீவிரம்...!!
கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருக்கும் 350 கிறிஸ்தவ ஆலயங்களில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
நாளை 25-ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முனனிட்டு, சென்னையில் மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பண்டிகையைக் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நகை பறிப்பு, செல்போன் பறிப்பு, நகை பறிப்பு போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் வரும் கிருத்துவ ஆலயங்களான பாரிமுனை அந்தோணியார் ஆலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கதீட்ரல்) ஆலயம், சைதாப்பேட்டை சின்னமலை ஆலயம் போன்றவற்றில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை காவல் துறை கமிஷனர் சங்கர் ஜீவால் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.
முக்கியமான பகுதிகளில் ரோந்து வாகனங்கள் தொடர் ரோந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு போன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், குற்றப்பிரிவு காவலர்கள் சாதாரண உடையிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர். முக்கியமான பகுதிகளில் ட்ரோன் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி, சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் ஆலயத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது, கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு இன்று இரவு தொடங்கி இரண்டு நாள்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.