மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அளவில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட ஜெயிக்காது - மம்தா பானர்ஜி!
இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 40 தொகுதிகளில் கூட ஜெயிக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்நோக்கி தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகளை பேசி வருகிறது.
இந்த தேர்தலிலும் வழக்கம்போல் இருமுனை போட்டியாக பாஜக மற்றும் காங்கிரஸ் களம் காண்கிறது. இதில் காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து இந்தியா என்ற வலுவான கூட்டணியை உருவாக்கியது.
ஆனால் தற்போது இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட உடைந்து விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கொடுக்க மாட்டோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் தனித்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சியும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் நான் கூறினேன். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி உடன் நாங்கள் கூட்டணிக்கு நாங்கள் தயாராக இருந்தோம் ஆனாலும் அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். இனிமேல் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.