Lok Sabha 2024 | தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் தலைமை.!!



congress-head-quarter-announced-candidates-for-tamilnad

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் தலைமையில் இந்தியா கூட்டணியில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமுகமாக முடிவடைந்தது. இதில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு பாண்டிச்சேரி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியது.

Poiliticsஇந்நிலையில் இன்று இரவு காங்கிரஸ் கட்சியின் தலைமை தங்களது மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி தொகுதிகளுக்கான 7 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலான வேட்பாளர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

Poiliticsகாங்கிரஸ் கட்சியின் சார்பாக சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட இருக்கிறார். கரூர் தொகுதியிலும் கடந்த முறை வெற்றி பெற்ற ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் மற்றும் கடலூர் தொகுதியில் விஷ்ணு பிரசாத் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர். திருவள்ளூர் தொகுதியில் திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் கிருஷ்ணகிரி தொகுதியில் கோபிநாத் மற்றும் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட இருக்கின்றனர். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வைத்தியலிங்கம் மீண்டும் போட்டியிட இருப்பதை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.