மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென மாற்றமடைந்த திமுகவின் தேர்தல் அறிக்கையால் மக்கள் மகிழ்ச்சி.!
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் பல முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன.
இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும்போது மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவினை எடுத்திருப்பதாக மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.