காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
LOK SABHA| விசிக - திமுக தொகுதி பங்கீடு.! விடாப்பிடியாக நின்ற திருமாவளவன்.! சாதித்து காட்டிய திமுக.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பரபரப்பாக நடைபெற்று வருகிறது தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் காங்கிரஸ் மதிமுக கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை இந்தியா கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடு தற்போது நடைபெற்று வருகிறது.
திமுகவின் பாராளுமன்ற தேர்தல் குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பல்வேறு பின்னடைவுகளுக்குப் பிறகு சுமுகமாக முடிந்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை வைத்திருந்தது.
3 பொது தொகுதிகள் மற்றும் 1 தனி தொகுதி என நான்கு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இழுப்பறி நீடித்து வந்தது. விசிக 3 தொகுதிகளை கேட்ட போதும் அவர்களுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுக்க திமுக உறுதியாக இருந்தது.
தங்களுக்கு குறைந்தபட்சம் 3 தொகுதிகளாவது வழங்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டார். எனினும் 2 தொகுதிகளுக்கு மேல் வழங்க திமுக மறுத்துவிட்டது. இதனை பயன்படுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு அதிமுக முயற்சி செய்தது. எனினும் திருமாவளவன் திமுக கட்சியுடன் 2 தொகுதிகளுக்கு சம்மதித்து இந்தியா கூட்டணியில் தொடர்வதை உறுதி செய்து இருக்கிறார். திமுக கூட்டணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.