மோடிக்கு பயம் வந்திடுச்சு!! எங்கள் முதல் வாக்குறுதி இதுதான்.. பட்டையை கிளப்பும் கதிர் ஆனந்த்..
மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளநிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும்நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பாஜகவினால் மக்கள் படும் துயரங்களையும், திமுக தமிழக மக்களுக்கு செய்துவரும் சேவைகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்தமுறை பாஜக 100 இடங்களுக்கும் குறைவாகவே வெற்றிபெறும் எனவும், திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் எனவும் கூறியுள்ளார். டோல் கேட் கட்டணம் ஏற்றம் என மத்திய அரசு அறிவித்த 2 மணி நேரத்திற்குள் வாபஸ் பெறுகிறார்கள் என்றால் அதற்கு தோல்வி பயம் தான் காரணம் எனவும், மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் கதிர் ஆனந்த் பேசியுள்ளார்.
மேலும், மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தால் திமுக கொண்டுவந்த திட்டங்களை ஒழிப்பேன் என பிரதமர் பேசிவருவதாகவும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு, மாணவர்களுக்கு 1000 உதவி தொகை, பெங்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற பல நல்ல திட்டங்களை திமுக கொண்டுவந்துள்ளதாகவும் கதிர் ஆனந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், தற்போது தளபதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது, வரவேற்பு பெற்றுள்ளது. அடிப்படை தேவைகள், கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அதுவும் மக்களுக்கு அன்றாட தேவைப்படக்கூடிய திட்டங்கள் தேர்தல் அறிக்கையாக நமது முதல்வர் கொடுத்து இருக்கிறார் எனவும், நாங்கள் வெற்றிபெற்றால் கேஸ் சிலிண்டரை 500 ரூபாய்க்கு தருவோம் என்பதை வாக்குறுதியக தருவதாகவும் கதிர் ஆனந்த் பேசியுள்ளார்.
கடந்த முறை தேர்தலில் வெற்றிபெற்ற கதிர் ஆனந்த் அவர்கள் சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை, கே.வி குப்பம் சுங்கச்சாவடி அகற்றல், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்துக்கொடுத்ததற்கான பணியை தொடங்கி வைத்தல், மக்களுக்கான மருத்துவ முகாம்கள், அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வுகள் என பல்வேறு பணிகளை செய்துகொடுத்ததை அடுத்து அவருக்கு தற்போதும் அந்த பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருப்பதால், இந்தமுறையும் அவர் வெற்றிபெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.