ஸ்டாலினுக்கே கண்டிஷன் போட்ட காளியம்மாள்.. டீல் ஓகே ஆச்சா? இல்லையா.?!



kaliyammals condition for dmk to join

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். அடுத்ததாக அவர் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக அவர் இருந்தார். அவரது தைரியமான பேச்சு அவருக்கு நிறைய பிரபல தன்மையை ஏற்படுத்திக் கொடுத்தது. 

இந்த நிலையில் தான் கட்சியிலிருந்து அவர் விலகினார். அடுத்ததாக அவர் எந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், திமுகவில் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவரது அரசியல் நகர்வு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் அவருக்கு முக்கிய பொறுப்பு திமுக சார்பில் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Kaliyammal

தற்போது நாகை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்து வருகிறார். அவர் திமுகவில் இணைய காளியம்மாளை அழைத்தபோது அவர் நிறைய டிமாண்ட் வைத்ததாக தெரிகிறது. அதாவது, வரும் தேர்தலில் தனக்கு நாகை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம். 

இதையும் படிங்க: #Breaking: தோல்வியடைந்த திமுக.. அன்பில் மகேஷுக்கு அமைச்சர் பொறுப்பு தேவையா? - அண்ணாமலை காட்டம்.!

இது மட்டுமல்லாமல் தனது பக்கத்தை பலப்படுத்தும் விதமாக பல்வேறு கோரிக்கைகளை திமுகவிடம் அவர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் அவர் உடனடியாக முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் விஜயால், ஸ்டாலினுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உற்சாகத்தில் உடன்பிறப்புக்கள்.!