எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதே திராவிட மாடல் ஆட்சி: எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி..!



dravidian-model-of-government-means-that-everyone-is-th

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நான்காவது தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மாநாட்டில் சிறப்புறையாற்றிய தமிழக முதல்வர், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நான்கு முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இதையே பல இடங்களில் பேசியும் வருகிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்பவது ஒன்றுதான்.

நான்கு முதலமைச்சர்கள் அல்ல , யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை அரசுக்கு வழங்குகிறார்களோ, எந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, இது தான் திராவிட மாடல் ஆட்சி.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னாரே அந்த ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு கட்சியின் ஆட்சியாக நீங்கள் கருத வேண்டிய அவசியம் இல்லை. ஒரு இனத்தினுடைய ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் என்று மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.