மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஜாவையே கதற வைக்கும் அதிமுக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு, தலை சுற்றிப்போன மின் ஊழியர்கள்.!
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மவ்லும் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்தும் தவித்துவருகின்றனர்.மேலும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் மின்சாரம் இன்றி பல ஊர்கள் இன்று வரை இருளில் மூழ்கியுள்ளது.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், தன்னார்வல தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி உதவி வருகின்றனர்.
.இந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முற்றிலும் சேதமடைந்த மின்கம்பங்களை நவீன டெக்னாலஜி மூலம் விமானத்தைக் கொண்டு நட வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் நடுக்கடலில் பாலம் கட்டும்போது நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? எனவும் கேள்வி எழுப்பி, அதற்கான டெக்னாலஜியை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினார். இதனைக்கேட்டு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.