மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.30 ஆயிரம் கோடியில் பெரும்பங்கு செந்தில் பாலாஜி கொடுத்தது - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றசாட்டு.!
சேலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பணியாற்றுகையில், ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை சபரீசன், மு.க ஸ்டாலின் மகன் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பதாக கூறினார்.
ரூ.30 ஆயிரம் கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ செய்தியை மக்கள் வெளியிடவில்லை, எதிர்க்கட்சி வெளியிடவில்லை. அமைச்சர் மட்டுமே அதனை தெரிவித்துள்ளார். இந்த ரூ.30 ஆயிரம் கோடியில் பெரும் பணத்தை கொடுத்தது செந்தில் பாலாஜி தான்.
இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மக்களுக்கு நன்மை செய்யாமல், துறை ரீதியாக கொள்ளையடித்துள்ளனர். அவரின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைக்கு கீழ் இருக்கிறார்" என பேசினார்.