மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றவாளியா.? எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரிக்கவே இல்லை. அதற்குள் அவர்களை குற்றவாளிகள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்:-
"குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில், “குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்’’ என்று குறிப்பிட்டுளார். நீதியின்பால் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது, திமுக அரசின் காவல் துறையால் போடப்பட்ட பொய் வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படவே இல்லை.
இந்த நிலையில், அவர்களை குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.