மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விசுவாசம் இல்லாத அதிமுக நிர்வாகிகள்; அப்செட்டில் எடப்பாடி பழனிச்சாமி.!
சென்னையில் உள்ள ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று சென்னை மண்டல அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.
அச்சமயம் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார். அச்சமயம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்ட செயலாளர்களை கடிந்துகொண்டதாகவும் தெரியவருகிறது.
அதிமுக வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் பணியாற்றவில்லை. மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் தலைமையின் மீது தொண்டர்களுக்கு இருந்த விசுவாசம் என்பது தற்போது இல்லை என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.