#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலரும்..!! எடப்பாடி பழனிசாமி உறுதி..!!
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீண்ட இழுபறி மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்னர், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி இது குறித்து மேலும், தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவின் பொதுக்குழு தீர்மானங்கள் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்சியளிக்கிறது. முன்னதாக நீதிமன்றமும், பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளேன். இதற்காக அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க நிறுவனர் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில், இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
தி.மு.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது ஒன்றே எங்களது லட்சியம். தி.மு.கவை எதிர்க்கும் தெம்பும், திராணியும் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க தான். மற்றவர்கள் குறிட்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும், மீண்டும் அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்வோம். மக்களிடையே எங்களுக்கு பேராதரவு உள்ளது. மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி மலரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.