திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திராவிடத்தை ஆன்மிகத்திலிருந்து பிரிக்க முடியாது..! அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு.!!
தமிழகத்தின், மதுரை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தற்போது ஆய்வு செய்து வருகிறார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வருகின்ற ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கப்பட உள்ளார். இதில், ரூ.134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம், மேலும் ரூ.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் வாங்கி குவித்துவைத்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர் ஏ.வ.வேலு, "கலைஞர் நூற்றாண்டு விழா தினத்தை ஒட்டி, இந்த நூலகம் திறக்கப்பட இருப்பதாகவும், வருகின்ற ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பர் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் பயிற்சி பெற்றவர் என்று பெருமை பேசியுள்ளார். மேலும்
திராவிடத்துக்குள் ஆன்மிகம் உள்ளது எனவும், திராவிடத்தை ஆன்மிகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது என்றும் அதில் அவர் பேசியுள்ளார்.