ரஜினி பேசுவது ஒரு வாசகமாக இருந்தாலும் அது திருவாசகமாக இருக்கும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி..!



even-if-rajini-speaks-in-a-jargon-it-will-be-thiruvasak

நடிகர் ரஜினிகாந்த்-தமிழக ஆளுனர் சந்திப்பு இன்று தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், விவாதப் பொருளாகவும் மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினியின் ஆளுனருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும், தற்போது அது குறித்து யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றும் அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு முன்பாக கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறியதுடன், சட்டென திரும்பி தனக்கே உரிய ஸ்டைலில் வீட்டிற்குள் சென்றார்.

ரஜினி-ஆளுனர் சந்திப்பு கூறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ரஜினி பேசுவது அவருக்கும் புரியாது, யாருக்கும் புரியாது.  ஒரு நாள் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பார். மறுநாள் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிடுவார். அதன் பின்பு நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு போய்விவார். அவரை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம் என்று கூறி சிரித்தார்.

இதே விஷயம் குறித்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ரஜினிகாந்த் பேசுவது ஒரு வாசகமாக இருந்தாலும் அது திருவாசகமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும், ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி சொன்னது குறித்தும், அ.தி.மு.கவிற்கு தலைமை ஏற்கவிருக்கிறார் ரஜினி என்று வெளிவரும் செய்திகள் குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.