மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் மகன் நாம் தமிழரில் இணைய விருப்பம் சொன்னாரா?.. உண்மையை போட்டுடைத்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.!
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, அத்தொகுதியில் பிப்.28 இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியாகின்றன.
காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவ பிரசாத், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகனும் நானும் நல்ல நண்பர்கள், அவர் நாம் தமிழர் கட்சியில் இணைவது தொடர்பாக என்னிடம் பேசியிருந்தார்" என பரப்புரை மேற்கொண்டார்.
இது ஈரோடு கிழக்கு அரசியல் களத்தினை பரபரப்பாக்க, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சீமானின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். "இந்த விஷயம் தனக்கே புதிதாக இருக்கிறது என்று கூறிய ஈ.வி.கே.எஸ்., சீமான் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக எனது மகன் இளைஞர் காங்கிரஸிலேயே இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.