மனோகர் பாரிக்கர் முதல்வர் பணிகளை செய்கிறாரா? வீடியோ ஆதாரம் கேட்கும் காங்கிரசால் பரபரப்பு.!
தொடர்ந்து உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை எடுத்து வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தனது முதல்வர் பணியினை செய்கிறாரா என்பது குறித்து குறைந்தபட்ச வீடியோ
ஆதாரமாவது வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக மும்பை, கோவா, அமெரிக்க என பல இடங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய மனோகர் பாரிக்கர் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செப்டம்பர் 7 தேதி அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 14 வரை சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று கோவா திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மனோகர் பாரிக்கர் முதல்வர் பணிகளை சரிவர செய்யாமல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்க முயல்வதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர தேஷ்பிரபு இது குறித்து பேசும்போது: மனோகர் பாரிக்கர் பேசுகிறாரா? நடக்கிறாரா? முதல்வருக்குரிய வேலைகளைச் செய்கிறாரா? எதுவும் தெரியவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் அதற்கு வீடியோ ஆதாரத்தையாவது வெளியிட வேண்டும்.
மேலும், மனோகர் பாரிக்கர் எந்த நிலையில் இருக்கிறார் என மருத்துவ அறிக்கைகளும் வெளியாவதில்லை. மருத்துவர்கள் யாரும் அவரது உடல் நிலை பற்றிப் பேசுவதில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.